அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்
Jun19 , 2020 SWOTT
அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவை இனி ஆன்லைனில் செய்யலாம்.
• தமிழ்நாடு ஓவியர் நலவாரியம்
• தமிழ்நாடு ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர் நலவாரியம்
• தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம்
• தமிழ்நாடு உணவு சமைக்கும் பணியாளர்கள் நலவாரியம்
• தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நலவாரியம்
• தமிழ்நாடு காலணி மற்றும் தோல் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர் நலவாரியம்
• தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரியம்
• தமிழ்நாடு முடி திருத்துவோர் நலவாரியம்
• தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம்
•
• தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியம்
• தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாலர் நலவாரியம்
• தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நலவாரியம்
• தமிழ்நாடு மண்பாண்டம் நலவாரியம்
• தமிழ்நாடு விசைத்தறி தொழிலாலர்கள் நல வாரியம்
• தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலவாரியம்
• தமிழ்நாடு தையல் தொழிலாளர் நலவாரியம்
• தமிழ்நாடு சலவை தொழிலாளர் நலவாரியம்
இந்த இணையதளம் மூலம் 17 தொழிலாளர்கள் நலவாரியத்தில் விண்னப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஆன்லைனில் விண்னப்பிக்க:
மேலும் விண்னப்பிக்க தேவையான ஆவணங்கள்:
• ஆதார் கார்டு
• ரேசன் கார்டு
• வங்கி கணக்கு விவரம்
• மற்றும் வயது சான்று கீழ் உள்ள ஏதேனும் ஒன்று
• பள்ளி சான்றிதழ்
• பிறப்பு சான்றிதழ்
• ஓட்டுநர் உரிமம்
• வாக்காளர் அடையாள அட்டை
விண்ணப்பிப்பது எப்படி:
முதலில் இந்த அமைப்புசாரா தொழிலாளர் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அதில் Online services” என்பதை கிளிக் செய்யுங்கள் அதில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்ய” என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து உங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து Send OTP என்று கொடுக்க வேண்டும். OTP எண் வந்த பிறகு அந்த எண்ணை கொடுத்து என்டர் செய்யவும். அடுத்து உங்கல் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யுங்கள் அதில் உங்கள் விவரம், முகவரி, வங்கி விவரங்கள், அனைத்தையும் பூர்த்தி செய்து உங்கள் கைப்படம் Upload செய்யவும்.
அடுத்து உங்கள் வாரியத்தினை செலக்ட் செய்து கொள்ளுங்கள், அடுத்து அதில் கேட்கும் ஆவணங்களை அப்லோடு செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்