9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க புதிதாக பெயர் சேர்க்கலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தற்போது httt://tnsec.tn.nic.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் வாக்காளர்கள் தங்களின் பெயர், வார்டு மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்லது
வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்கவும் திருத்தம் செய்யவும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று அவர்களது பெயர்களை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் அதன்பின்பு கிராம ஊராட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.