🌸தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் நேரத்தில்… சமூக பணிக்குழு அறக்கட்டளையின் (SWOTT) தன்னலமற்ற தொடர் சேவை.!. 🌴
🔳இன்று (04.09. 2021) காலை சுமார் 07.00 மணியளவில், செங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக பணிக்குழு அறக்கட்டளை (SWOTT), மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து…
🔳செங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியின், பொறுப்பு தலைமை ஆசிரியை திருமதி. M. R. புஷ்ப லதா, அவர்களின், வேண்டுகோளுக்கிணங்க, பள்ளி வளாக சுற்றுப்புறங்களில் தூய்மை பணியை, மேற்கொண்டனர்…
🔳அங்கு, தேவையில்லாமல், வளர்ந்து, படர்ந்திருந்த செடி,கொடிகளை, அகற்றி, அங்கிருந்த குப்பை கூளங்களையும் அகற்றி தூய்மைப்படுத்தினர்.!.
https://www.facebook.com/swottngo/videos/570653477471146/
🔳தொடர்ந்து அப்பகுதியில், இருக்கும் மரங்களை பாதுகாக்கும் வகையில், தேவையான சூழலை உருவாக்கினர்…
🔳இதில் சமூக பணிக்குழு அறக்கட்டளை (SWOTT) ன் நிறுவனர் Dr.சமீர், செயலர். திரு.பாரி செல்வம், தலைவர். திரு.பரசுராமன், இளைஞர்கள், ரஃபிக், சக்திவேல், உசைன், ராபர்ட், சௌமியா, யுவராஜ், இன்னும் பலர் கலந்துகொண்டனர்.!.
🔳மேலும் இது சம்பந்தமாக,பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை கூறுகையில், இந்த சிறப்புமிக்க சேவையை தகுந்த நேரத்தில் SWOTT அமைப்பினர் செய்து தந்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, பள்ளி வளாகத்தில் இன்னும் அதிகமான மரங்களை நட வேண்டும், அம்மரங்கள் பறவைகளை ஈர்க்கக் கூடியதாக அமைய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்கள்… 🌴
🔳அவ்வாறு, செயல்படுத்தப்படும் போது, பள்ளி வளாகம் நிச்சயமாக ஒரு பசுமை பூங்காவாக மாறும் என்பதில் ஐயமில்லை எனவும்… இது, இப் பள்ளியில் பயில வரும் நமது இளைய சமுதாயத்தினருக்கு புத்துணர்ச்சி தருவதோடு, நம் வருங்கால சந்ததியினரை ஊக்குவிப்பதாகவும் அமையும் என்றும் தெரிவித்தார்கள்.!.
🌴இன்றைய தூய்மை பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் SWOTT – ன் – செயலர் திரு. பாரிசெல்வம், அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.!. 🌹
. SWOTT – தொடர்பிற்கு :-
🪀9362222786. www.swott.in 🏵️