வரும் 30 ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் திவேதி ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஏற்கவுள்ளார். இப்போது ராணுவத் துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, நாட்டின் 30வது இராணுவ தலைமை தளபதியாகப் பொறுப்பேற்க இருக்கிறார். இவர் காலாட்படை டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பல பொறுப்புகளையும் கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.