
நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் நீங்கள் வாக்களிக்கலாம்.
அதற்கு தேவையான 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உபயோகப்படுத்தலாம்.
தேர்தல் ஆணையம் அங்கீகரித்த சில ஆவணங்களை கொண்டு நீங்கள் வாக்களிக்கலாம்.
அவை என்னென்ன ஆவணங்கள்👇
வாக்காளர் அடையாள அட்டை {இருந்தால் மட்டும் போதுமானது}
ஆதார் அட்டை
வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகம்
ஓட்டுநர் உரிமம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணி அட்டை
பான் கார்டு
பாஸ்போர்ட்
மத்திய அல்லது மாநில அரசின் பணியாளர் அடையாள அட்டை
ஸ்மார்ட் கார்டு {தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்திய தலைமை பதிவாளர் ஆல் வழங்கப்பட்டது}
ஓய்வூதிய ஆவணம்.
நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலக அடையாள அட்டை
மருத்துவ காப்பீடு அட்டை.
இவைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து நீங்கள் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.