முழு விவரம்..
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
முழு வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்து கொள்வதை அடையாளப்படுத்துவதே வெள்ளை அறிக்கை என்பது ஆகும்
மக்களிடத்தில் வெளிப்படையாகத் தெரிவித்து அவர்களைத் தெளிவுபடுத்தும் அறிக்கை. வெள்ளை அறிக்கை என்பது ஆகும் பொதுவாக சொல்லவேண்டும் என்றால் ‘வெளிப்படையான’ விளக்கம் தரும் அறிக்கை என்பதே வெள்லை அறிக்கை ஆகும்
அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையாக இருக்கும் இந்த வெள்ளை அறிக்கை, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புள்ளி விவரங்களுடம் இருக்கும்.
தமிழகத்தின் வரவு – செலவு கணக்குகள், கடன் அளவு, நிதி இருப்பு உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும்
தமிழக அரசின் நிதி நிலை, கடன் அளவை மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாது, மக்களும் தெரிந்து கொள்வதற்கு இந்த வெள்ளை அறிக்கை உதவியாக இருக்கும்
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகால பேசுபொருளாக இருக்கும் இந்த வெள்ளை அறிக்கை, தமிழகத்தின் நிதிநிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படவுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி. பொன்னையன், பட்ஜெட் தாக்கலின் போது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன்பின்னர் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.
வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சம்:
2020-21-ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் சுமை ரூபாய் 5.75 லட்சம் கோடி ஆக உள்ளது தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 பொதுக்கடன் உள்ளது என தெரிவித்துள்ளார்
Article Categories:
Breaking News