அன்பர்களே, தாங்கள் என் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பிற்கு, நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த டாக்டரேட் பட்டம் (Honorary Doctorate) எனக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டது அல்ல, அதோடு இந்த பட்டம் பெறுவது என்பது தனி மனிதனால் சாத்தியமானதும் அல்ல. இது சமூகப் பணி செய்ததற்கான / செய்வதற்கான, ஊக்குவித்தல் பட்டமே.!.
சமூகப் பணி என்பது ஒரு கூட்டு செயல், நீங்களெல்லாம் உள்ளன்போடு, (அசௌகரியங்களை, களைந்துவிட்டு) எம்முடன், இணைந்திராவிட்டால் /இணைந்து செயல்பட்டிராவிட்டால், இது நிச்சயம், சாத்தியம் ஆகி இருக்காது, என்பதை இங்கு நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன்.
இது சம்பந்தமாக SWOTT சார்பாக, வெளியிட்ட தகவலிலும் இந்த டாக்டரேட் பட்டம், சமீர் எனும் தனிமனிதனுக்கு சொந்தமானது அல்ல. இது சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் சொந்தமானது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை, இங்கு மீண்டும் நான் நினைவு கூற விரும்புகின்றேன்.
டாக்டரேட் பட்டத்திற்கு நன்றி, மற்றும் வாழ்த்து தெரிவித்து… தகவல் அனுப்பிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், இந்த நேரத்தில் நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை SWOTT ன் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி. 💝
என்றென்றும், உங்கள் அன்பன்.
சமீர் – SWOTT
🪀9362222786. www.swott.in 🏵️