🏵️ முக்கிய நிகழ்வு…🏵️

Written by
  • Admin .
  • 3 years ago

🔹மறைந்த, நமது காவல்துறை அன்பர்களின், சேவையை நினைவு கொள்ளும் விதமாகவும், மரியாதை செலுத்தும் வகையில், வீர வணக்க நாளாக 29.10.2021 – அன்று சென்னையின், ரெட்டேரி பகுதியில் மரக்கன்றுகள், நட்டு அவர்கட்கு அஞ்சலி செலுத்தும் விதமாக…

https://www.facebook.com/swottngo/videos/1380006189125094/

🔹நமது, சென்னை மாநகர காவல் துறை கமிஷனர் திரு. சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்களின் தலைமையில், இன்றய நிகழ்வு துவங்கியது.

🔹போக்குவரத்து காவல்துறை ( வடக்கு மண்டலம்) ஏற்பாடு செய்த இந்த விழா, ரெட்டேரி பகுதியில் மாலை சுமார் 4.30 மணியளவில் துவங்கியது.

🔹இந், நிகழ்வின் துவக்கமாக டாக்டர் திரு.பிரதீப் குமார். ஐபிஎஸ். அவர்கள், அனைவரையும் வரவேற்று, அதோடு இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவம், மற்றும் மறைந்த காவல்துறை அன்பர்களின் தியாகங்களையும் எடுத்துரைத்தார்கள்.

🔹தொடர்ந்து, சென்னை
மாதவரம் போக்குவரத்து காவல் துறையின் சார்பாக, ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் திரு. சங்கர் ஜிவால் ஐபிஎஸ்.
திருமதி.லலிதாலஷ்மி ஐபிஎஸ்,
திரு.பிரதீப் குமார் ஐபிஎஸ், திரு.துரைகுமார் ஐபிஎஸ்,
திரு.சுந்தரவதனம் ஐபிஎஸ்,
திரு. அசோக்குமார் ஐபிஎஸ்,
திரு.லோகநாதன் ஐபிஎஸ்,
ஆகியோர்கள், மறைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவர்களின் நினைவாக இரட்டை ஏரியின் கரையோரம் 150 மரக்கன்றுகளை நட்டுவித்து அஞ்சலி, செலுத்தினார்கள்.

🔹இந்த நிகழ்வில் கலந்துகொண்ட, மறைந்த காவலர்களின் குடும்பத்தார்கள், மறைந்த தங்களது, உறவுகளின் ஞாபகார்த்தமாக, இங்கே தங்களது கைகளால், மரக்கன்றுகளை நட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

🔹தொடர்ந்து, மறைந்த காவலர்களின் உறவினர்கள், தங்களது வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு, கோரிக்கைகளை திரு. சங்கர் ஜிவால். ஐபிஎஸ். அவர்களிடம், மனுவாக கொடுத்து, அதை நிறைவேற்றித் தருமாறு, வேண்டுகோள் வைத்தனர்.

🔹மனுவை பெற்றுக்கொண்ட, ஐபிஎஸ் அவர்கள், வெகு விரைவில், ஆவன செய்வதாக, உறுதி அளித்து, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார்கள்.

🔹இறுதியாக டாக்டர் பிரதீப். ஐபிஸ்., அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு சுமூகமாக / நினைவு கூறும் விதமாக நிறைவு பெற்றது.

🔹இந்த, சிறப்பு மிக்க நிகழ்வானது, சென்னை காவல்துறையின் ஏற்பாட்டில்,

★சென்னை மாநகராட்சி,
★PWD மற்றும்
தன்னார்வலர்கள் அமைப்புகளான …

★SWOTT-
சமூக பணிக்குழு அரக்கட்டளை.

★ரெட்டேரி, வாக்கர்ஸ் கிளப்.

★Dr. அப்துல் கலாம், கல்வி மற்றும், பசுமை அறக்கட்டளை.

★கலாம், மக்கள் மன்றம்.

★குழலோசை.

★காவல், கரங்கள்.

★அல்ஃபா, மெட்ரிகுலேஷன் பள்ளி.

★குட் வர்ட், பப்ளிக் ஸ்கூல்.

★குயின் மேரிஸ், காலேஜ்.

★யூத், ரெட் கிராஸ்.

★இந்தினை.

★பசுமை பூமி, அறக்கட்டளை.

★எக்ஸ்நோரா, இன்டர்நேஷனல்.

★இன்னும், பல அமைப்புகள் இணைந்து, இந்த நிகழ்வு, சிறப்பாக அமைய அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு தந்தனர்.

🔹கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்கள், அரசு அமைப்புகள், அதிகாரிகள், மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும், இங்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்…
நன்றி. 💐

SWOTT.
(Social Work Team Trust)

. SWOTT – தொடர்பிற்கு :-
🪀9362222786. www.swott.in 🏵️

Article Categories:
Notice Info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *