. ♦️20.02.2022 ♦️
♦️🌴புழல் மற்றும் ரெட்டேரியின், தொடர் தூய்மை பணியின் – 108- வது வாரமாகிய இன்று, நமது பணி, காலை 06.30 மணிக்கு துவங்கியது.!.
♦️குறிப்பாக, இன்றய நமது பணியானது, ரெட்டேரியின் பகுதியை , மட்டும் கவனத்தில் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து, செயல்படத் துவங்கியது, குறிப்பிடத்தக்கது.!.
♦️இன்றைய நமது தூய்மை பணியானது. SWOTT- ன் – தலைவர். திரு. பரசுராமன் அவர்கள் தலைமையில் சமூக பணிக்குழு அறக்கட்டளை (SWOTT) உறுப்பினர்களுடன், SWOTT -ன் – நிறுவனர், Dr.சமீர் மற்றும், டாக்டர்.அப்துல் கலாம் கல்வி மற்றும் அரக்கட்டழை குழுவினர், மற்றும் ATHAYI ULAMA ASSOCIATION. – ஐ- ச் சார்ந்த சமூக ஆர்வலர்களும் நம்முடன், இணைந்து ஆங்காங்கே வளர்ந்து நின்ற தேவையற்ற செடிகொடிகளை அகற்றியும்,
♦️ஏரிக் கரை பகுதியில், நட்டுவைத்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றியும், போவோர் வருவோர் வீசிச் சென்ற கழிவு / குப்பைகளை அகற்றியும், திறம்பட செயலாற்றினார்கள்..
♦️குறிப்பாக, இன்று நமது தூய்மை பணி நடந்து கொண்டிருந்த சமயம், சிறப்பு பார்வையாளர்களாக. N.S.G. ஐச் சார்ந்த Mr. Anil from Kerela (Ex N. S. G Havildar Grade ) Mr. Rajesh from Bangalore (Ex N. S. G Subedar Grade ) கலந்து கொண்டு, SWOTT -ன்- செயல்பாடுகளைப் பற்றி கேட்டு அறிந்து, பாராட்டியதோடு, அவர்களும் தூய்மைப் பணியில், கைகோர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.!.
♦️இன்றைய தூய்மை பணியில் பங்கேற்ற, அனைவருக்கும், காலை சிற்றுண்டி SWOTT- ன் – சார்பாக வழங்கப்பட்டது.
♦️இதனைத் தொடர்ந்து SWOTT ன் செயலாளர் திரு.பாரி செல்வம் . அவர்கள், இன்றைய தூய்மை பணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி அனைவரும் விடை பெற்றனர்.
♦️இவ்வாறு, நாம் ஒவ்வொரு வாரமும் ஒரு இலக்கை வகுத்து, தொடந்து தூய்மை படுத்தும், பணியை செய்தால், நமது புழல் ஏரி மற்றும் ரெட்டேரியின் புகழ், நிச்சயம் குறிப்பிட்டு பேசக் கூடிய நிலைக்கு உயர்ந்து விடும் என்பது உறுதி.!.
♦️மேலும், நம் வருங்கால சந்ததியினருக்காக, ஏதாவது விட்டுச்செல்ல வேண்டுமென விரும்பினால், இந்த பலன் தரும், மரம் நடும் சேவை, மற்றும் நீர் நிலைகளை பராமரித்து பாதுகாக்கும் சேவைகளில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீவிரமாக இறங்கி, அதற்காக பாடுபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.!.
♦️நீங்களும் ,எங்களுடன் (SWOTT ) இணைந்து, சமூக பணியில் உங்களை இணைத்துக் கொள்ள விரும்பினால்… வரும் வாரங்களில் எங்களுடன் இணைந்து சேவை செய்ய, உங்களை மகிழ்ச்சியுடன், வரவவேற்கிறோம்.!!.
♦️🏵️♦️குறிப்பாக இந்த எமது, தொடர் தூய்மைப் பணி மற்றும், இது போன்று, நாங்கள் செய்து வரும் பல, தன்னலமற்ற, தொடர் சேவைகளுக்கு, எங்களுக்கு (Sponsors) ஆதரவாளர்கள், தேவைப்படுகிறார்கள்.ஆர்வம் உள்ள அன்பர்கள், அமைப்புகள், கண்டிப்பாக எங்களுடன் இணைந்து எங்களை ஊக்குவிக்குமாறு அன்புடன், இந்த சமயத்தில் கேட்டுக்கொள்கிறோம்…
♦️மீண்டும் சந்திப்போம், அடுத்த வாரம் (27.02.20222 – ஞாயிற்றுக்கிழமை..) இறை இணக்கத்துடன்..!!..
♦️எங்களைப் பற்றிய, முழு விவரங்களையும் தெரிந்து / இணைந்து கொள்ள..!!.. ♦️
⬇️
To Reach … SWOTT.
SOCIAL WORK TEAM TRUST
🪀9362222786. www.swott.in 🏵️