உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு நினைவு கூறும் விதமாக 05/06/2022 ஞாயிற்றுக் கிழமை காலை, திருவள்ளூர் மாவட்டம் பாண்டேஸ்வர் ஏரியினை புனர் அமைப்பு செய்ய திட்டமிட்டபடி, புனரமைப்பு பணியை, மாண்புமிகு தமிழக அரசு பால்வளத் துறை அமைச்சர் நாசர் துவங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், அல்பின் ஜான் வர்கிஸ் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள சுதர்சனம், துரை சந்திரசேகரன் மற்றும் பாண்டேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ராம் மற்றும் பார்த்தசாரதி EFI அருண் பொதுப்பணித்துறை அதிகாரிகள் E.E.பொதுப்பணி திலகம் A.E. சதீஸ் குமார் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்/ செல்வகுமார் மற்றும் பசுமை தீர்ப்பாய அதிகாரிகள், கலந்து கொண்டார்கள்.இவர்களோடு சமூக பணிக் குழு அறக்கட்டளை (SWOTT) ன், நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் தன்னார்வலர்கள், ஊர் மக்கள், திரளாக கலந்து கொண்டனர்.குறிப்பாக இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின், முக்கிய விருதுகளின் ஒன்றான பசுமை முதன்மையாளர் விருது (Green Champion Award.) Social Work Team Trust – (SWOTT) ன், சேவையை, பெருமைப்படுத்தும் விதமாக, நினைவு பரிசு, மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கப்பட்டது.இந்த நினைவு பரிசையும், காசோலையையும், தமிழக பால்வளத் துறை அமைச்சர்/ நாசர் அவர்களிடமிருந்து, SWOTT -ன் – நிறுவனர்/Dr. தமீம் அன்சாரி (எ) சமீர், பெற்றுக் கொண்டார்கள்.-இவர்களுடன் SWOTT-ன் – தலைவர்/ பரசுராமன் செயலாளர்/ பாரி செல்வம் பொருளாளர்/ தமீமுன் அன்சாரி செய்தி தொடர்பாளர்/ஷா செய்யது அட்மின்- சுஹைல், சக்திவேல், ஷாஹூல், கார்த்திக், லோகேஷ், வேலு, ஹரீஸ், அஸீம், ஜியா, சமீரா, இப்ராஹிம், மிஸ்பா, மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தார்கள்._இறுதியாக இந்த விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய்/ காசோலை, SWOTT-ன்- தன்னலமற்ற சேவைக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் என்பதாக, SWOTT -ன் – பொருளாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் SWOTT சமூக பணி அறக்கட்டளை தலைவர்/ பரசுராம் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இந்நிகழ்ச்சி இனிதே, நிறைவுற்றது.