
வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று புழல் ஏரியில் தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
1999-ல் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார். அதற்கு பின்னர் கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியில் தமிழ்நாடு முதல்வர் நேரில் ஆய்வு.
இந்த ஆய்வின் போது புழல் ஏரி மற்றும் நீர்வழிப்பாதைகளில் முன்னெச்சரிக்கை பணிகளான
ஏரிகளில் நீர் இருப்பு, ஏரிகளின் மதகுகளின் உறுதிதன்மை, நீர் வழிப்பாதைகளில் ஆகாய தாமரை அகற்றுதல், கரைகளை பலப்படுத்துதல் குறித்து ஆலோசனை செய்தார்கள். அதனை தொடர்ந்து நான் முதல்வர் அவர்களிடம் இன்னும் 4ஆண்டுகளில் புழல் ஏரி கட்டப்பட்டு 150 வருடங்கள் ஆகப்போகிறது என்பதனையும் அதற்குள் நம் புழல் ஏரியை சுற்றுலா தலமாக்கும் திட்டங்களை விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறினேன்.
அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தலாம் என்று கூறினார்கள்.
இந்த சரித்திர நிகழ்விற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களுக்கும், தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் திரு.சந்தீப் சக்சேனா.IAS. அவர்களுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மற்றும் எனது உயிரில் கலந்த ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எந்தன் நெஞ்சார்ந்த நன்றிகள்.
என்றும் நன்றியுடன்
தனுவேல்ராஜ் முத்துக்காத்தன்.
தமிழக நீர் மேலாண்மை உயர்மட்ட திட்ட குழு ஆலோசகர்,
🔷எங்களைப் பற்றிய, முழு விவரங்களையும் தெரிந்து / இணைந்து கொள்ள..!!.. ♻️
⬇️
தொடர்பிற்கு :-
🪀9362222786.
www.swott.in 🏵️